திருமணத்தில் மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ!
திருமணத்தின் போது, மனைவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற கணவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆசீர்வாதம்
காலம் காலமாக நமக்கு வீட்டிலும், சினிமாவிலும் காண்பித்து வந்தது, நம்மை விட வயதில் பெரியவர்களை பார்த்தால் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் என்பது தான்.
சில நாட்களுக்கு முன்பு ஏன் என் மனைவி மட்டும் தாலி அணியவேண்டும்? நானும் அணிகிறேன் என்று ஒருவர் திருமணத்தின்போது, தன் மனைவியின் கையால் தாலியை கட்டிக்கொண்டார்.
லக்கி பெண்
அவரது மனைவி எப்போதெல்லாம் கழுத்தில் தாலியை அணிகிறாரோ, அப்போதெல்லாம் தானும் அணிவதாக உறுதியளித்தார். அதுவும் வெளியில், எல்லோரும் பார்க்கும்படி அணிவேன்,
அதில் எனக்கு கூச்சமில்லை என்றும் கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பேங்கிங் அனலிஸ்டாக பணிபுரியும் திதி கொராடியா ராய் தான் அந்த லக்கி பெண். இவர் இன்ஸ்டாகிரம் இன்ஃப்ளூயென்சராகவும் உள்ளார்.
செம்ம சர்பிரைஸ்
தாலி கட்டியதும் கணவனின் காலில் விழுந்து மனைவியை கும்பிட சொல்வார்கள். ஆனால் இங்கு இவரது கணவர், தன் மனைவியின் காலை தொட்டு கும்பிட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத திதிக்கு செம்ம சர்பிரைஸ். காதல் எப்படி இரு தரப்பிலிருந்தும் இருக்கவேண்டுமோ, அது போல தானே மரியாதையும்? அதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது இந்த தம்பதியின் செயல்.
வைரல்
அதுவும், சந்தோஷமாக, எந்த வித தயக்கமும் இன்றி அவர் அந்த பெண்ணின் காலில் விழுந்தார். இதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த திதி "எங்கள் திருமணத்திற்கு வந்திருந்த புரோகிதருக்கு முதலில் இது பிடிக்கவில்லை.
ஆனால் கிளம்பும் முன் அவர் நான் மிகவும் கொடுத்துவைத்தவள் என்று சொல்லிவிட்டு சென்றார்" என்று பதிவிட்டிருந்தார். கமென்ட் செக்ஷனில் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த பலரின் கருத்தும் இதுவாக தான் இருந்தது.
ஆணும் பெண்ணும் சமம் என்பது, வீட்டிலிருந்து துவங்கினால் தான் சமூகத்திலும் அதற்கு வலு அதிகரிக்கும் என்பதற்கு இவர்கள் சான்று!
நித்யானந்தா வசமுள்ள மகளை மீட்டுத்தாங்க... ஆதங்கத்துடன் பெற்றோர் புகார்!