இணையத்தை கலக்கும் ‘டான்’ படத்தின் making Comedy வீடியோ வைரல்

Sivakarthikeyan Don Soori
By Nandhini Jun 27, 2022 08:24 AM GMT
Report

‘டான்’ திரைப்படம்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் “டான்”. இப்படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் கடந்த மே 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த ‘டான்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

ரஜினி வாழ்த்து

சமீபத்தில் ‘டான்’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு போனில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். படக்குழுவினருடன் போனில் பேசிய ரஜினி, ‘சூப்பர்ப்பா.. கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியல’ என்று கூறியதாக தகவல்கள் வெளியானது.

இணையத்தை கலக்கும் ‘டான்’ படத்தின் making Comedy வீடியோ வைரல் | Soori Don Sivakarthikeyan

Making Comedy வீடியோ வைரல்

இப்படத்தில் வரும் சூரியும், சிவகார்த்திகேயனின் காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுக்காப்சா... ஆ...ப்பா.... தெரியாம பண்ணிட்டா... என்ற வசனம் பார்ப்போரை வயிறு குலுங்க சிரித்து வைத்துள்ளது.

தற்போது இந்தக் காமெடி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அந்தக் காமெடி காட்சியை நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.