ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு : குடும்பத்துடன் கலந்துகொண்ட முதல்வர்!

A R Rahman M K Stalin Chennai Marriage
By Sumathi Jun 10, 2022 04:26 PM GMT
Report

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மூத்த மகள் கதீஜா

ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அவர் சவுண்ட் இன்ஜினியரான ரியாசுதீன் ஷேக் முகமது என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு : குடும்பத்துடன் கலந்துகொண்ட முதல்வர்! | Mkstalin Participate Ar Rahman Daughter Marriage

இவர்களது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

முதல்வர் பங்கேற்பு

திருமணம் முடிந்து மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் முக ஸ்டாலின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மூத்த மகள் கதீஜா ரியாசுதீன் ஆகியோர் வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் வருகையை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் காவல்துறையினர் வழிநெடுகிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.