தாலி கட்டும் நேரத்தில் மணமகன் செய்த செயல் - மயங்கி விழுந்த மணமகள்!

Marriage Vellore
By Sumathi Nov 21, 2024 02:00 PM GMT
Report

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

வேலூர், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் செய்த செயல் - மயங்கி விழுந்த மணமகள்! | Groom Runs Away During Wedding Vellore

முன்னதாக அதற்கான சடங்குகள் நடத்தப்பட்டது. பின், மணமகள் மன மேடைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், மணமகன் மன மேடைக்கு வரவில்லை. உடனே, உறவினர்கள் மணமகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

தாமதமாக வந்த மணமகன்... - மணமேடையில் கடுப்பில் மணமகள் செய்த செயல் - அடுத்து நடந்ததைப் பாருங்க...

தாமதமாக வந்த மணமகன்... - மணமேடையில் கடுப்பில் மணமகள் செய்த செயல் - அடுத்து நடந்ததைப் பாருங்க...

மாப்பிள்ளை மாயம்

ஆனால், தொலைப்பேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, இரு வீட்டாரின் உறவினர்களும் மணமகனை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். இதற்கிடையில் மணமகள் அதிர்ச்சியில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் செய்த செயல் - மயங்கி விழுந்த மணமகள்! | Groom Runs Away During Wedding Vellore

தொடர்ந்து மணமகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணமகன் மாயமானதால் திருமணம் நின்றுபோனது. தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மாயமான இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.