கடைசி நேரத்தில் மண்டபத்திலிருந்து மணப்பெண் ஓட்டம் - மாப்பிள்ளை செய்த செயலை பாருங்க!
மணப்பெண் திருமண நேரத்தில் காணாமல் போன சம்பவம் உறவினர்களை கதி கலங்க செய்தது.
திருமணம்
கடலூரைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர். இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இரவு திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமேடையில் மணமக்கள் பங்கேற்றனர். அதன்பின் அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தனர்.
மணப்பெண் மாயம்
இதற்கிடையில், அதிகாலையில் மணமகள் மாயமானார். அதன் பின் விசாரித்ததில் திருமணம் பிடிக்காமல் அவர் சென்றுவிட்டது தெருயவந்தது. அதனையடுத்து, இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
பின் மணமகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து குறித்த முகூர்த்த நேரத்தில் திருமணத்தை நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி உறவினர் பெண் ஒருவரிடம் பேசி மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டார். உடனே இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.