தாமதமாக வந்த மணமகன்... - மணமேடையில் கடுப்பில் மணமகள் செய்த செயல் - அடுத்து நடந்ததைப் பாருங்க...

Angry Groom Bride திருமணம் மணமகன் Marriage-Hall Figth Viral-Video மணமகள்
By Nandhini Mar 04, 2022 09:48 AM GMT
Report

திருமணம் என்றாலே அது நமது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கியமான தருணம். இரு மனங்கள் இணைந்து சங்கமிப்பதற்காக ஆணும், பெண்ணும் திருமணம் என்ற பந்தத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு அற்புதமான நிகழ்வாகும். 

ஆனால், சமீபத்தில் திருமணத்தில் மணமகன், மணமகளை அடிப்பதும், மணமகள் கோபப்படுவது போன்ற வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதுபோலத்தான், தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், மணமகள் நீண்ட நேரமாக மணமடையில் மணமகனுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால், மணமகன் வர மிகவும் தாமதமாகியுள்ளது. 

மணமகன் ஊர்வலமாக சென்ற வாகனம் கூட்ட நெரிசலில் சிக்கியதால், மணமகன் மண்டபத்திற்கு வர தாமதமாகியிருக்கிறது. 

ஒருவழியாக மணமடைக்கும் மணமகன் வந்து விட்டார். ஆனால், நீண்ட நேரமாக காத்துக்கொண்டிருந்ததால், மணமகளுக்கு கடுப்பாகியுள்ளது. 

அப்போது, மணமகன் அப்பெண்ணை சமாதானப்படுத்த இனிப்பு எடுத்து ஊட்டி விட சென்றார். அப்போது, அந்தப்பெண் அதை வாங்க மறுத்து தூக்கி எறிந்தார். பிறகு, அப்பெண் மணமகனுக்கு பால் கொடுத்தார். அப்போது, மணமகன் அந்த பாலை ஏற்க மறுத்ததால், அந்த பால் டம்பளரை தூக்கி எறிந்துள்ளார் அப்பெண்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள்... செத்தான்ய்யா சேகரு... அவன் வாழ்க்கையே கதம்.. கதம்.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.