குதிரையில் வந்த மணமகன்; 200 போலீஸார் பாதுகாப்பு - என்ன காரணம் தெரியுமா?
200 போலீசார் பாதுகாப்புடன் மணமகன் குதிரையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
ராஜஸ்தான், லவீரா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண். இவரது மகள் அருணா. இவருக்கும் விஜய் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
தொடர்ந்து திருமணத்திற்கு மணமகள் இல்லத்திற்கு மணமகனை குதிரையில் அழைத்து வர திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், திருமண வீட்டார் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மணமகன் குதிரையில் ஏறி வரக்கூடாது என்று அந்த கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
எனவே, மணமகனை குதிரையில் அழைத்து வரும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசில் மனு அளித்தனர். இதனையடுத்து திருமணத்தையொட்டி லவீரா கிராமத்தில் 200 போலீசார் குவிக்கப்பட்டனர்.
முடிவெடுத்தப்படி, விஜய் திருமணம் நடைபெறும் பகுதிக்கு குதிரையில் வந்தார். பின் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 200 போலீசாருடன் மணமகன் குதிரையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.