மண மேடையில் மாப்பிள்ளை செய்த மோசமான செயல்; அடுத்த நடந்த சம்பவம் - வைரல் வீடியோ!

Viral Video Marriage Bengaluru
By Sumathi Jan 15, 2025 02:00 PM GMT
Report

மணமகன் குடிபோதையில் திருமண மேடையில் செய்த செயல் வைரலாகி வருகிறது.

குடிபோதை

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

மண மேடையில் மாப்பிள்ளை செய்த மோசமான செயல்; அடுத்த நடந்த சம்பவம் - வைரல் வீடியோ! | Groom Throws Aarti Plate While Drunk Video Viral

தொடர்ந்து மணமகன் நண்பர்களுடன் குடித்து விட்டு போதையில் திருமண மேடைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

விருந்தினர்களிடமும் தகாத வகையில் நடந்துள்ளார். உடனே மணமகளின் தாய் அதிர்ச்சி அடைந்து கையெடுத்து கும்பிட்டு, இந்த திருமணமே வேண்டாம் என அதனை ரத்து செய்துள்ளார்.

மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார் - மகன் எடுத்த அதிரடி முடிவு

மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார் - மகன் எடுத்த அதிரடி முடிவு

மணமகன் ரகளை

அவரை திருமண நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர் அமைதிப்படுத்த முயல்கையில், தாய், திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நோக்கி கும்பிட்டு, அனைவரும் கிளம்பி செல்லுங்கள் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

அந்த நபர் இப்பவே இப்படி நடந்து கொள்கிறார் என்றால், மகளின் வருங்காலம் என்னவாகும்? என கேட்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும், ஆரத்தி தட்டை மணமகன் குடிபோதையில் தூக்கி வீசியுள்ளார் என கூறப்படுகிறது. அந்த பெண்ணின் முடிவுக்கு சமூக ஊடகத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.