இனி இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித்தொகை - அரசு வாக்குறுதி!

Indian National Congress Delhi
By Sumathi Jan 13, 2025 03:27 AM GMT
Report

இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித்தொகை அளிப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

 உதவித்தொகை

டெல்லியின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடக்கவுள்ளது. தொடர்ந்து 8-ந் தேதி, வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இனி இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித்தொகை - அரசு வாக்குறுதி! | Ongress Promises 8500 Every Month To Jobless Youth

இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தேசிய இளைஞர் தினத்தையொட்டி, இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

அப்போது டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களைச் சந்தித்தார். டெல்லியை ஆளும் ஆம் ஆத்மியும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் ஒருவரையொருவர் குற்றம் சொல்கிறார்கள். மக்களை மறந்து விட்டனர்.

கும்பமேளாவில் நிர்வாண சாமியார்கள்; அதுதான் சனாதன உச்சம் - அரசால் வெடித்த சர்ச்சை

கும்பமேளாவில் நிர்வாண சாமியார்கள்; அதுதான் சனாதன உச்சம் - அரசால் வெடித்த சர்ச்சை

காங்கிரஸ் வாக்குறுதி 

காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்காக பணியாற்றி வருகிறது. மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, ஒரு வாக்குறுதியை உருவாக்கி இருக்கிறோம்.

congress

அதாவது, டெல்லியில் ஆட்சி அமைத்தவுடன், டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.8,500 வழங்கப்படும். ஓராண்டு காலத்துக்கு பயிற்சியுடன் இத்தொகை வழங்கப்படும்.

நிதியுதவி அளிப்பதுடன், அந்த இளைஞர்கள் எந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்றார்களோ, அதிலேயே அவர்களை பணியில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கப்படும். நாங்கள் சொல்வதை செய்வோம் என்று மக்களுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.