பெண்கள் உதவித்தொகை.. இனி ரூ.1000 இல்ல..ரூ.2500 - வாக்குறுதி கொடுத்தது யார் தெரியுமா?
பெண்கள் உதவித்தொகையை ரூ.2500 யாக அதிகரித்து வழங்கப்படும் என்று டெல்லி காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
பெண்கள் உதவித்தொகை
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்ற முக ஸ்டாலின் தலைமையிலான அரசு மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தைப் பின்பற்றி வருகிறது.இதனால், மகளிர் உரிமைத் திட்டம் இந்தியா முழுவதும் இந்த திட்டம் பிரபலமாகி வருகிறது.
ரூ.56 கோடியில் 12 தங்க கழிப்பறைகள்.. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இத்தனை வசதிகளா? வெளியான அதிர்ச்சி வீடியோ!
அந்த வகையில் டெல்லி சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அங்கும் பெண்களின் வாக்குகளைக் கவர மகளிர் உதவித் தொகை திட்டம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.
டெல்லி காங்கிரஸ்
ஏற்கனவே டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது.தற்போது சட்டசபைத் தேர்தல் அறிவிப்பையொட்டி அந்த தொகையை ரூ.2100 ஆக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.
முன்னதாக மகளிர் உதவித் தொகை வழங்கப்படும் வாக்குறுதியை வெளியிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.