வேலையை ராஜினாமா செய்தால் 20 லட்சம்..அரசு ஊழியர்களுக்கு வந்த ஒன்றை இ-மெயில் - எங்க தெரியுமா?
அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க அதிபர் டிரம்ப் வினோத முடிவு எடுத்துள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்கா அதிபர் தேர்தல் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் 47வது அதிபராக 20-01-25 அன்று டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்.
பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க அதிபர் டிரம்ப் வினோத முடிவு எடுத்துள்ளார்.அந்த வகையில், அரசு அதிகாரிகளின் சலுகைகளில் வழங்கியுள்ளது.
இதற்காக விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்கப் பணியாளர் மேலாண்மை ஆணையம் அமெரிக்க அரசில் பணிபுரியும் சுமார் 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது.
வினோத முடிவு
அதில் டிரம்ப் தனது அரசு நிர்வாகத்தைச் சிறப்பாகச் செயல்பட வைக்க விரும்புவதாகவும், விசுவமாக இருக்கும் அரசு ஊழியர்கள் தனது நிர்வாகத்தில் இருக்க வேண்டும்" என விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் வேலை செய்ய விரும்பாத அரசு ஊழியர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்து கொள்ளலாம். இதற்கு அரசு வேலை வேண்டாம் என்றால், 'ராஜினாமா செய்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.அதன்படி, ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் முழுவதுமாக வழங்கப்படும்.
ஒரு வேலை அரசு வேலையில் தொடர விரும்பினால் டிரம்ப் அரசின் ஒரு பகுதியாக இணைந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும். ஆனால் உங்கள் வேலைக்கு முழு உத்தரவாதம் அளிக்க முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியால் அமெரிக்காவில் அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.