வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை.. 200 நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு - ஊழியர்கள் ஷாக்!

England World Work Permit
By Vidhya Senthil Jan 29, 2025 07:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

  இங்கிலாந்து நாட்டில் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் முறை திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. 

இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டில் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் முறை திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் பொருளாதார சூழல் காரணமாக வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறையால் சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்தி வருவதாகக் கூறப்பட்டு இருந்தது.

வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை

இதனைத் தொடர்ந்து வாரத்துக்கு 4 நாட்கள் வேலைத் திட்டத்துக்கான சோதனை முயற்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல் கட்டமாக 100 நிறுவனங்கள் 4 நாட்கள் மட்டுமே வேலைபார்க்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய நடைமுறையைச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு 2,600 பணியாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

தண்ணீர், ஏசி கூட இல்லாத விமானம் - மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா!

தண்ணீர், ஏசி கூட இல்லாத விமானம் - மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா!

4 நாட்கள் வேலை

மேலும் வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையைச் சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.இந்த புதிய திட்டத்தால் பணியாளர்களின் வேலைத்திறன் மேம்படுவதோடு நாட்டிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் .

வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை

அதுமட்டுமில்லாமல் இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.வாரத்தில் 4 நாட்கள் வேலைத் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் போன்ற கையெழுத்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.