தண்ணீர், ஏசி கூட இல்லாத விமானம் - மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா!
பிரேசில் மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
நாடு கடத்தல்
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கி வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர்.
மக்கள் வேதனை
விமானத்தில் குளிரூட்டி இயக்கப்படவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. விமானத்தினுள் அதிக வெப்பம் காரணமாக சிலர் மயங்கினர். பயணிகள் கழிவறையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை என நாடு கடத்தப்பட்டவர்களில் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர். இது அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல்.
பயணிகளை மிக மோசமாக நடத்தியது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என பிரேசில் வெளியுறவுறத்துறை தெரிவித்துள்ளது.