விரும்பிய நபர் துணையாக கிடைக்கனுமா? உள்ளாடையை கழட்டி இரும்பு வேலியில் போடணுமாம்..
உள்ளாடையை கழட்டி இரும்பு வேலியில் போடும் பழக்கம் ஒன்று கடைபிடிக்கப்படுகிறது.
பிரா வேலி
நியூசிலாந்து, மத்திய ஒடோகோவில் உள்ள ஒரு பகுதி கார்டோனா. இந்த பகுதியில் பிரா வேலி என்ற இடம் மிகவும் பிரபலம்.
இங்கு வரும் பெண்கள் வேலியின் முன் நின்று தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளை கழட்டி வேலியில் தொங்கவிடுகின்றனர். இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதற்கு ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு கம்பி வேலியில் உள்ளாடையை தொங்கவிட்டால் தாங்கள் விரும்பும் நபர் வாழ்க்கை துணையாக கிடைப்பார் என நம்பப்படுகிறது. முதன்முதலாக 1999ல் 4 உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
விரும்பிய துணை
நாளடைவில் அங்கு ஏராளமான உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டன. அதனை பார்த்த சில பெண்கள், அவர்களும் தங்கள் உள்ளாடைகளை தொங்கவிட்டனர். அதன்பின் இது வழக்கமாக மாறியுள்ளது. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு வேலியில் தொங்கவிடப்பட்ட உள்ளாடைகள் திருடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அந்த பகுதி மேலும் பிரபலமடைந்துள்ளது. அப்பகுதி மக்கள் மட்டும் இதை செய்துவந்த நிலையில் தற்போது ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் வேலியில் உள்ளடையை தொங்கவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.