இனி இந்திய ஆண்கள் - பெண்கள் இடையே திருமணம் கஷ்டம் தான் - புதிய சிக்கல்!
இந்திய ஆண்கள் பெண்கள் இடையே திருமணம் குறைய வாய்ப்புள்ளது.
திருமணம்
ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது.
இதனை ஆட்டோமேட்டிக் குடியுரிமை என அழைப்பார்கள். தற்போது இந்த சட்டத்தை நீக்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இனி அங்கே பிறக்கும் குழந்தை ஒன்றிற்கு தானாக குடியுரிமை கிடைக்க வேண்டும் என்றால் அதன் பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும்.
புதிய விதி
அல்லது கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும். சிட்டிசன்ஷிப் பெறுவதற்கு குடியுரிமை அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும். இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்கள் இடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அங்கே எல்லா இந்தியர்களிடமும் கிரீன் கார்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்தியர்கள் அமெரிக்கர்களை திருமணம் செய்து கொள்ளவோ, அல்லது அங்கு குடியுரிமை உள்ள பிற நாட்டினரை திருமணம் செய்து கொள்ளவோதான் வாய்ப்பு அதிகமாக உள்ளது.