TNPSC தலைவர் தேர்வு.. வெளிப்படைத்தன்மை இல்லை, சைலேந்திர பாபுவை ரிஜெக்ட் செய்த கவர்னர்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவராக சைலேந்திரபாபுவை கவர்னர் நிராகரித்துள்ளார்.
தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு பின்னர், தேர்வாணையத்தின் உறுப்பினராக இருக்கும் முனியநாதன் பொறுப்பு தலைவராக தற்போது வரை இருந்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைவர் பதவி காலியாக இருப்பதால் அதன் தேர்வுகள், தேர்வு முடிவுகள் போன்றவற்றை அறிவிப்பது தாமதமாகி வருகிறது.
அதனால் அந்த பதவியை நிரப்புவதற்கு, தமிழக அரசு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்து, பரிந்துரை கடிதத்தை கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதளுக்கு அனுப்பி வைத்து.
நிராகரிப்பு
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து தமிழக அரசிற்கும் இரண்டு முறை கோப்புகளை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதனையடுத்து ஆளுநருக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் கோப்புகளை அனுப்பியது. இந்த சூழ்நிலையில் தற்போது சைலேந்திரபாபுவை நியமிக்கும் கோப்புகளை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் TNPSC தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, வேறு ஒருவரை தேர்வு செய்ய கவர்னர் பரிந்துரை செய்யவும் ஆளுநர் ரவி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.