பாஜகாவின் பாதம் தாங்கி பழனிச்சாமி.. பிரிந்தது போல் நாடகம் ஆடுகிறார் - முதல்வர் காட்டம்!

M K Stalin Tamil nadu DMK Edappadi K. Palaniswami
By Vinothini Oct 23, 2023 05:16 AM GMT
Report

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

பயிற்சி பாசறை கூட்டம்

திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்ற திமுக-வின் பயிற்சிப்பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், "ஒளிமிகுந்த ஊரில் உங்கள் முகங்களைப் பார்க்கும்போது உதயசூரியனை பார்ப்பதுபோல் தோன்றுகிறது. திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் தி.மு.க-வும். யாராலும் பிரிக்கமுடியாது.

cm-stalin-criticized-edappadi-palanisamy

கடந்த மார்ச் மாதம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம். அப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம்.

வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்".

அப்பாக்கு தலைவர்னா கலைஞர் தான்!!அம்மா-சித்தி நடுவுல பிரச்சனை?? உடைத்து பேசிய முக அழகிரி மகள்!!

அப்பாக்கு தலைவர்னா கலைஞர் தான்!!அம்மா-சித்தி நடுவுல பிரச்சனை?? உடைத்து பேசிய முக அழகிரி மகள்!!

பழனிச்சாமி

இதனை தொடர்ந்து, "தி.மு.க ஆட்சிக்கு வந்து எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை’ என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளை கூறவேண்டுமானால், எனக்கு தனியே 2 மணி நேரம் வேண்டும். அவ்வளவு சாதனைகள் படைத்துள்ளோம்.

cm mk.stalin

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பச்சைப் பொய்யர் பழனிசாமி பேசுகிறார். பா.ஜ.க-வின் பாதம் தாங்கியாக இருக்கிற பழனிசாமி ஆட்சியில் நடைபெற்றதா? இன்னமும் தரையில்தான் ஊர்ந்துகொண்டிருக்கிறாரா, கொஞ்சம் தலையை தூக்கிப் பாருங்கள் பழனிசாமி, தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது.

டெபாசிட்டை காப்பாற்ற, பா.ஜ.க-விடம் இருந்து தனியாக பிரிந்ததுபோல் உள்ளே, வெளியே நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.