SSC தேர்வை இனி தமிழில் எழுதலாம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
Government Of India
By Thahir
எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை இனி தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழில் தேர்வு எழுத அனுமதி
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தேர்வு இனி 13 மாநில மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதியளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எஸ்எஸ்சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
11409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.