பேராசியர் நியமனத்தில் முறைகேடு..ஆளுநர் ரவி அதிரடி உத்தரவு - கலக்கத்தில் கல்லூரிகள்!
தமிழகத்தில் 353 பேராசிரியர்கள் பல பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்வதை அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்து மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முறைகேடு
சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 480 பொறியியல் கல்லூரிகளில், 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் பேராசியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது குறித்து விசாரணையில் தெரியவந்தது.
மேலும் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் வேலை செய்வதாக கூறி போலி கணக்கு காட்டியிருப்பதாகவும,தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சிக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் என்ன தண்டனை? அண்ணாபல்கலைக்கழக விசாரணை அறிக்கை வெளியாகுமா? அண்ணா பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் ரவி நடவடிக்கை எடுப்பாரா? தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாய் திறந்து பேசுவாரா? என அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியிருந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்த நிலையில், முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் முறைகேடுகளில் ஈடுபட்ட கல்லூரிகள் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு, ஆளுநரின் உத்தரவின் பேரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் பேராசிரியர் நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.