அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழர் நியமனம்! யார் தெரியுமா?

anna university new vice chancellor r velraj
By Anupriyamkumaresan Aug 10, 2021 08:58 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதிலும் இருந்து 160-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், அவற்றிலிருந்து 10 பேரைத் தேர்வு செய்து நேற்றைய தினம் தேடல் குழு நேர்காணல் நடத்தியது.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழர் நியமனம்! யார் தெரியுமா? | Anna University Vice Chancellor New R Velraj

நேர்காணல் முடிவில் தகுதியான 3 பேரை ஆளுநருக்கு தேடல் குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது வேல்ராஜை புதிய துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் மைய இயக்குநராக உள்ள வேல்ராஜ் விரைவில் துணைவேந்தராக பொறுப்பேற்பார் என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக பணியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.