Thursday, Apr 24, 2025

விரைவில் மதுரை ஆதீனம் தமிழக அரசை ஆதரிக்கும் நிலைவரும் : அமைச்சர் சேகர் பாபு

DMK P. K. Sekar Babu
By Irumporai 3 years ago
Report

மதுரை ஆதீனத்தின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துள்ளார்.

ஆன்மிகத்தை திராவிடம் திருடிவிட்டது

மதுரையில் நடைபெற்ற துறவியர்கள் மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும், ஆன்மீகத்தை திருடிக் கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள்.

திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது , என்று மதுரை ஆதீனம் தமிழக அரசின் செயல்பாடுகள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

விரைவில் மதுரை ஆதீனம் தமிழக அரசை ஆதரிக்கும் நிலைவரும் : அமைச்சர் சேகர் பாபு | Government Minister Ndowments P K Sekarbabu

இந்த நிலையில், இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.

ஆதினம் தமிழக அரசை ஆதரிக்கும்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் : தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக, செய்திகாக மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருகிறார். விரைவில் மதுரை ஆதீனம் தமிழக அரசை ஆதரிக்கும் நிலைவரும் என்று தெரிவித்தார்.

மேலும், கொள்ளையர்களின் கூடாராமாக அறநிலையத்துறை மாறிவருவதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டிய நிலையில், அதில் உண்மையில்லை என்று அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.     

விரைவில் மதுரை ஆதீனம் தமிழக அரசை ஆதரிக்கும் நிலைவரும் : அமைச்சர் சேகர் பாபு | Government Minister Ndowments P K Sekarbabu

தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக, செய்திகாக மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருகிறார். விரைவில் மதுரை ஆதீனம் தமிழக அரசை ஆதரிக்கும் நிலைவரும்.” என்று தெரிவித்தார்.

கொள்ளையர்களின் கூடாராமாக அறநிலையத்துறை மாறிவருவதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டிய நிலையில், அதில் உண்மையில்லை என்று அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.  

விரைவில் மதுரை ஆதீனம் தமிழக அரசை ஆதரிக்கும் நிலைவரும் : அமைச்சர் சேகர் பாபு | Government Minister Ndowments P K Sekarbabu

ஏறகன்வே நடந்த துறவிகளின் மாநாட்டில் பேசிய மன்னார்குடி ஜீயர் :மதம் மாறியவர்கள் அனைவரும் தேச துரோகிகள். ஹிந்து விரோதமாக யார் பேசினாலும் எல்லா விதத்திலும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்கள். அகண்ட பாரதத்தில் பாகிஸ்தான் பங்களாதேஷும் உள்ளது, அவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றி ஹிந்து ராஜியம்  அமைக்க வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது .

"பிரதமருக்கு மேடையில் வகுப்பு எடுத்தவர் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்" - உதயநிதி ஸ்டாலின்