"பிரதமருக்கு மேடையில் வகுப்பு எடுத்தவர் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்" - உதயநிதி ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Jun 06, 2022 12:30 AM GMT
Report

திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திருச்சி சிவா, மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: 

கலைஞர் இன்னும் நம்மோடுதான் இருக்கிறார். அவருடைய எண்ணம் தான் நம்மை இன்னும் வழிநடத்தி செல்வதாக நினைக்கிறேன். இன்று பலபேர் திராவிட மாடல் ஆட்சி குறித்து விளக்கங்கள் என்று கேட்கிறார்கள .

"பிரதமருக்கு மேடையில்  வகுப்பு எடுத்தவர் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்" - உதயநிதி ஸ்டாலின் | Cm Stalin T Modi Udayanithi Stalin Speech

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பது குறித்து நான் ஒரு சிறிய விளக்கத்தை சொல்கிறேன். பத்து நாட்களுக்கு முன்பு நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்தார். மோடி அவர்களையே மேடையில் வைத்து விட்டு இதுதான் திராவிட மாடல் ஆட்சி,

இதுதான் மாநில சுயாட்சி என்று மேடையிலேயே வகுப்பு எடுத்தவர் நம்முடைய முதல்-அமைச்சர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி. 'நம்பர் ஒன் முதல்வர்' என்று பெயர் எடுத்துவிட்டாலும், தமிழகம் 'நம்பர் ஒன் மாநிலம்' என்பதே பெருமை என்று முதல்-அமைச்சர் உழைத்து வருகிறார்."

மேலும் "பிரதமர் மோடிக்கு மேடையில் வைத்து வகுப்பு எடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்