சுந்தர் பிச்சை தினமும் காலை முதலில் பார்க்கும் வலைத்தளம் இதுதான் - கூகுள் இல்லையாம்..
சுந்தர் பிச்சை குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் காலையில் எழுந்ததும் எந்த வலைதளத்தை பார்ப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூகுள் என்று தான் தெரிவிப்பார் என நினைத்திருப்போம். ஆனால், அதுதான் இல்லை.
அவர் காலை எழுந்ததும் அவர் டெக் மீம் என்ற பக்கத்தைத் தான் பார்வையிடுவாராம். அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் அப்டேட் செய்திகளையும் அதில் பார்க்க முடியும்.
முதல் வேலை இதுதான்..
Bloomberg, CNBC, The Verge போன்ற ஊடகங்களின் பிரதான தொழில்நுட்ப கட்டுரைகள் அந்த பக்கத்தில் இடம்பெறும். இவர்மட்டுமல்லாது, தொழில்நுட்பத்துறையின் பல பெருந்தலைகள் இந்த பக்கத்தின் வாசகர்களாக உள்ளனர்.
மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா, லிங்க்ட்இன் நிர்வாகத் தலைவர் ஜெஃப் வீனர், முன்னாள் பேபால் நிர்வாகி டேவிட் மார்கஸ் மற்றும் முன்னாள் ட்விட்டர் CEO டிக் காஸ்டோலோ ஆகியோரின் ஃபேவரைட் தளமாக Techmeme உள்ளது.