விலக நினைத்த சுந்தர் பிச்சை; வற்புறுத்திய மனைவி அஞ்சலி - அதனால் தான் இப்போ இப்படி!
கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையின் காதல் கதை கவனம் ஈர்த்துள்ளது.
சிஇஓ சுந்தர் பிச்சை
உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருப்பவர் சுந்தர் பிச்சை. ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருந்த போது அவரது மனைவி அஞ்சலியைச் சந்தித்துள்ளார். இருவருமே ஒரே வகுப்பினர். உலோகவியல் பொறியியல் படித்துக் கொண்டிருந்தனர்.
நண்பர்களாக வலம் வந்தவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. படிப்பின் கடைசி ஆண்டிலேயே சுந்தர் காதலை அஞ்சலியிடம் தெரிவித்துள்ளார். அதன் பின் கல்லூரி முடிந்ததும் மேற்படிப்பிற்காக சுந்தர் அமெரிக்கா சென்றுள்ளார்.
கைகொடுத்த காதல்
தொடர்ந்து இருவரும் 6 மாத காலம் வரை பேசாமல் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் காதல் அதிகரித்துள்ளது. அதனையடுத்து அஞ்சலியும் அமெரிக்கா சென்றுள்ளார். செமிகண்டக்டர் நிறுவனமொன்றில் சுந்தருக்கு வேலை கிடைத்துள்ளது.
அப்போது திருமணம் செய்ய முடிவெடுத்த இருவரும் வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளனர். உடனே திருமணமும் செய்துக்கொண்டனர். தொடர்ந்து இருவரும் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார்கள். அதன்பின், கூகுளில் சுந்தர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில்,
மைக்ரோசாஃப்ட், டிவிட்டர், யாகூ போன்ற நிறுவனங்கள் சிஇஓ பதவிக்காக இவரை நாடினர். சுந்தரும் கூகுளை விலக நினைத்த சமயத்தில் அஞ்சலி கூகுள் நிறுவனத்திலேயே வேலை செய்ய வலியுறுத்தியுள்ளார். இன்று அதுதான் அவருக்கு வெகுமதி சேர்த்துள்ளது.