உலகுக்கு முன்னோடி திட்டம் 10 மில்லியன் டாலர் முதலீடு : பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை உறுதி

Google
By Irumporai Jun 24, 2023 03:30 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

டிஜிட்டல் இந்தியாதிட்டத்தின் கீழ் கூகுள் முதலீடு செய்ய உள்ளதாக பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

பிரதமர் அமெரிக்க பயணம்

அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நியூயார்ககில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் பின்னர் உலக தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளை நடத்தினார்.

உலகுக்கு முன்னோடி திட்டம் 10 மில்லியன் டாலர் முதலீடு : பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை உறுதி | Sundar Pichai Told Prime Minister Modi Google

கூகுள் முதலீடு 

கூகுள் தலைமை சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு அந்த நிகழ்வில் பேசுகையில், தற்போது இந்தியாவில் அமலில் உள்ள டிஜிட்டல் இந்தியா திட்டமானது உலகுக்கு ஒரு முன்னோடி திட்டம் என்றும், அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனமானது பத்து மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக பிரதமரிடம் கூறியதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்,குஜராத் கிப்ட் சிட்டியில் சர்வதேச பின்டெக் செயல்பாடுகள் தொடங்க இருப்பதாகவும் கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை வாஷிங்க்டன் விழாவில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் தெரிவித்தார்.