சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கிய பிரபல நடிகர் - கண்ணீர் விட்ட தந்தை!

Chennai Sundar Pichai
By Sumathi May 20, 2023 06:45 AM GMT
Report

சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சை வீடு

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. மதுரையைச் சேர்ந்த இவர் 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். முதலில், வாடிக்கையாளர் சாப்ட்வேர் பிரிவில் பணியாற்றினார்.

சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கிய பிரபல நடிகர் - கண்ணீர் விட்ட தந்தை! | Sundar Pichai Chennai House For Sale To Actor

தொடர்ந்து பல ஆண்டுகள் அங்கே வேலை செய்து பல்வேறு பொறுப்புகளை வகித்து கூகுள் சிஇஓ பதவிக்கு உயர்ந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டை, சுந்தர் பிச்சையின் தந்தை தற்போது விற்பனை செய்துள்ளார்.

தமிழ் நடிகருக்கு விற்பனை

நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் அந்த வீட்டை வாங்கியுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், எந்த இடத்திலும் சுந்தர் பிச்சையின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அவரது தந்தை உறுதியாக இருந்தார். இதனால் அவரது தந்தை பதிவு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தார்.

சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கிய பிரபல நடிகர் - கண்ணீர் விட்ட தந்தை! | Sundar Pichai Chennai House For Sale To Actor

ஆவணங்களை என்னிடம் ஒப்படைப்பதற்கு முன்பு தேவையான அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தினார். மேலும், சுந்தர் பிச்சையின் தந்தை முதன்முதலாக வாங்கிய சொத்து இது என்பதால் ஆவணங்களை ஒப்படைக்கும் போது அவர் கண் கலங்கினார்.

சுந்தர் பிச்சை நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார், அவர் வாழ்ந்த வீட்டை வாங்குவது என் வாழ்வின் பெருமைக்குரிய சாதனையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.