5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை சம்பளம் எவ்வளவு தெரியுமா?

google sundarpichai
By Irumporai Jun 12, 2021 10:32 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ-ஆக உள்ள சுந்தர் பிச்சைக்கு இதுவரை 80,000 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும்  தொழில் நுட்ப நிறுவன சிஇஓ-க்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ் 

அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள்:

பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஸூக்கர்பெர்க் இந்திய மதிப்பில் 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.

2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பங்குகள் மற்றும் பணமாக இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 அதனை தொடர்ந்து கூகுள் மற்றும், ஆல்பபெட்  நிறுவனத்தின் சிஇஓ-வாக உள்ள சுந்தர் பிச்சை 80,000 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.

2015 முதல் 2020 வரையான 5 ஆண்டுகளுக்கு பங்குகள் இழப்பீடுகள் பணம் என இந்த தொகை சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.