சுந்தர் பிச்சை பதவி நீக்கம்? ஷாக் தகவல் - இதுதான் காரணமா!
சிஇஓவாக பொறுப்பில் இருந்து சுந்தர் பிச்சை நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது.
சுந்தர் பிச்சை
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. தேடுபொறி தொடங்கிப் பல வசதிகளில் இந்த உலகையே மாற்றி அமைத்த நிறுவனம் கூகுள் என்றே கூறலாம்.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது.
ஆனால், ஜெமினி சாட்பாட்டில் படங்களை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைத்தளங்களில் சில பயனர்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து, இது முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றதாக கூகுள் நிறுவனம் சார்பாக கூறப்பட்டது.
பதவி நீக்கம்?
இந்நிலையில், ஜெமினியின் இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தின் சர்ச்சைக்கு சுந்தர் பிச்சை, பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சிகள் செய்வதாக தெரிவித்தார். ஆனால், இந்த AI தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராததால் கூகுள் சமீபத்தில் இந்த செயலியை இடைநிறுத்தியது.
இதனால், பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இதன் எதிரொலியாக தற்போது சுந்தர் பிச்சையை உயர் பதவியில் இருந்து நீக்க அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் OpenAI ஆராய்ச்சியாளரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கூகுளை தற்போதைய நிலையில் வைத்திருக்க தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம் தேவை என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.