சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் - போர்கொடி தூக்கிய பணியிழந்த ஊழியர்கள்!

Google Sundar Pichai
By Sumathi Jan 25, 2023 11:25 AM GMT
Report

சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் என்று பணியிழந்த ஊழியர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர்.

பணிநீக்கம் 

பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கினார். வாங்கிய கையோடு, செலவுக் குறைப்பு என்ற பெயரில் அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அதனால், அந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் - போர்கொடி தூக்கிய பணியிழந்த ஊழியர்கள்! | Google Layoffs Resignation Of Ceo Sundar Pichai

அதைத் தொடர்ந்து, மெட்டா (ஃபேஸ்புக்), இணைய வணிக நிறுவனமான அமேசான், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.பி உட்பட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் ஆட்குறைப்பு நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்கள் ஆதங்கம்

மேலும் பிரபல முன்னணி நிறுவனமான கூகுள், 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் இழப்பை சந்தித்ததற்கு அதன் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று பணி இழந்த ஊழியர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர்.

இதனிடையே கடந்த காலாண்டில் லாபம் ஈட்டிய கூகுள் நிறுவனம், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது ஏன் என்றும் தொழிலாளர் நலவாரியம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரபல முன்னணி நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினால், சிறிய நிறுவனங்களுக்கு அது தவறான முன்னுதாரணமாக அமையும் என்று தொழிலாளர் நலவாரியத்தினர் தெரிவித்தனர்.

எனவே, ஆட்குறைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு தரப்பில் இருந்து ஐ.டி. நிறுவனங்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.