இனி கூகுள் பே-வில் இதையெல்லாம் செய்தால் கட்டணம் - மக்களே கவனிங்க!
சில நடைமுறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக கூகுள்பே தெரிவித்துள்ளது.
கூகுள் பே
கூகுள் பே, போன் பே, பே டி.எம்., ஆகிய செயலிகள் பண பரிமாற்றம் செய்வதில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதில், போன் பே, பே டி.எம்., நிறுவனங்கள் சில சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கிறது.
இதேபோல் கூகுள் பேவும் ரீசார்ஜூக்கு ரூ.3 சேவை கட்டணமாக வசூலித்து வருகிறது. இந்நிலையில், மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பண பரிமாற்றம்
பில் தொகையில் இருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இதுபோன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலி நிறுவனங்கள், யு.பி.ஐ., (UPI) பணப்பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட தொகையை சேவை கட்டணமாக வசூலித்து,
தங்களின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் மட்டும் கூகுள் பே-வில் ரூ.8.26 லட்சம் கோடி யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.