Gmail தானே யூஸ் பண்ணுறீங்க? கூகுள் நேரடியாக கொடுத்த எச்சரிக்கை - உடனே பாருங்க!
Gmail கணக்குகள் குறித்து கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gmail கணக்கு
உலகத்தில் உள்ள அணைத்து ஜிமெயில் பயனர்களுக்கு AI உதவியுடன் நடைபெறும் புதிய ஹேக்கிங் குறித்து கூகுள் நிறுவனம் நேரடி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திருடும் மோசமான ஹேக்கர்கள் ஜிமெயில் பயனர்களை போனில் அழைத்து கூகுள் சப்போர்ட் ஏஜெண்ட்ஸ் போல பாவித்து, உங்கள் ஜிமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறி பேச துவங்குவார்கள்.
பின் உங்கள் ஜிமெயில் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள ரெக்கவரி கோட் எண்களை எங்களிடம் பகிருங்கள். ஹேக் செய்யப்பட்ட உங்கள் ஜிமெயில் கணக்கை மீண்டும் உங்களிடம் பாதுகாப்பாக மீட்டு தருகிறோம் என்பார்கள்.
கூகுள் அலெர்ட்
ரிக்கவரி கோட் விவரங்களை அந்த நபருடன் பகிர்ந்த அடுத்த நோடி முதல் உங்கள் கிமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விடும்.
இத்தகைய சிக்கலில் சிக்காமல் இருக்க (Gmail 2 factor authentication) அம்சத்தை ஆக்டிவேட் செய்ய Google வலியுறுத்தியுள்ளது. ஏஐ (AI) அம்சத்தை பயன்படுத்தி 2.5 பில்லியன் ஜிமெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.