ஜியோ ஹாட்ஸ்டார் இலவசம்; ஆனால், யாருக்கெல்லாம் தெரியுமா? முழு விவரம்!
ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய தளம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார்
முன்னணி ஓடிடி தளங்களாக ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் ஒன்றாக இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய தளமும், ஓடிடி தளமும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்க்க தனியாக சந்தா கட்ட வேண்டும்.
ஆனால், குறிப்பிட்ட மூன்று டைப் யூசர்களுக்கு மட்டும் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இருக்க வேண்டும். டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு நீங்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வந்தால் ஜியோ ஹாட்ஸ்டார் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.
சந்தா விவரம்
ஆக்டிவ் ஜியோசினிமா சப்ஸ்கிரிப்ஷன் இருந்தாலும் இலவசமாக கிடைக்கும். ஹாட்ஸ்டாரைப் போலவே, ஏற்கனவே ஜியோ சினிமாவுக்கு கட்டணம் செலுத்தியிருந்தால், ஜியோ ஹாட்ஸ்டாரை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இது தவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அல்லது ஜியோசினிமா (பிரீமியம்) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கும் ரீசார்ஜ் அல்லது பிராட்பேண்ட் திட்டங்களை வைத்திருந்தால் ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாகக் கிடைக்கும். இதில், ஆட்டோபே வசதி ரத்து செய்யப்படுகிறது.
எனவே, ஜியோ ஹாட்ஸ்டாருக்கு நீங்கள் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். விளம்பரங்கள் உடன் என்றால் 149 ரூபாய் முதலும், விளம்பரங்கள் தேவையில்லை என்றால் ரூ.299 முதலும் பிளான்கள் உள்ளன.