அடிக்கடி ஸ்பேம் கால்ஸ் வருகிறதா? 24 மணி நேரத்தில் நிறுத்தலாம் - ஈஸி வழி!
ஸ்பேம் கால்ஸ், எஸ்எம்எஸ் வருவதை நிறுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஸ்பேம் கால்ஸ்
இந்தியாவில் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் என அனைத்து வங்கிகளும் ஸ்பேம் கால்ஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றன.
ஆனால் ஸ்பேம் கால்ஸ் மோசடி அதிகரித்து கொண்டுதான் வருகிறது. எனவே, இந்த ஸ்பேம் கால்ஸ்களை 24 மணி நேரத்தில் தடுத்து நிறுத்துவது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
எப்படி தடுக்கலாம்?
உங்கள் கால்ஸ் ஹிஸ்டிரியில் ஒரு ஸ்பேம் எண்ணை நீண்ட நேரம் அழுத்தி, அதை கருப்புப் பட்டியலில் சேர்க்க 'தடு/ஸ்பேமைப் புகாரளி' Block/Report Spam என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை தடுக்க, ஏதாவது ஒரு ஸ்பேம் எஸ்எம்எஸ்ஸை நீண்ட நேரம் அழுத்தி மேலே தோன்றும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, 'தடு' Block என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இதன் மூலம் ஸ்பேம் கால்ஸ் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை தடுத்து நிறுத்தலாம்.