Google Pay சேவை ஜூன் முதல் நிறுத்தம்; அதிர்ச்சியில் பயனாளர்கள் - என்ன காரணம்..?
அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் கூகுள் பே சேவை நிறுத்தப்படும் என கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகிள் பே
கூகுள் நிறுவனத்தின் 'கூகிள் பே' (Google Pay) செயலியை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் டீக்கடை முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே பயன்பாடு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானோர் கூகுள் பே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் கூகுள் பே வசதி நிறுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பயனாளர்கள் அதிர்ச்சி
கூகுள் பே ஆப்பை விட கூகுள் வாலட்டின் பயன்பாடு அங்கு அதிகமாக இருப்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கூகுள் பே செயலி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும். கூகுள் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு அமெரிக்க பயனாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.