செல்போன் தொலைந்து போச்சா? கூகுள் பே, போன் பே-வை எப்படி பிளாக் செய்வது தெரியுமா?
செல்போன் தொலைந்துவிட்டால் யுபிஐ ஐடி மூலம் பணம் பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
யுபிஐ ஐடி
நம்முடைய மொபைல் போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போய்விட்டாலோ அல்லது திருடப்பாட்டாலோ நம்முடைய முக்கியமான யுபிஐ விவரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பெரிய ஆபத்து வரக்கூடும்.
திருடப்பட்ட மொபைல் போன்களிலிருந்து யுபிஐ விவரங்களை பயன்படுத்தி பலரின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கப்படுகிறது.
எப்படி பிளாக் செய்வது?
வங்கி கணக்கு சேவைகள் முடக்கப்பட்டாலும், திருடிய நபர்கள் உங்களுடைய யுபிஐ செயலிகளுக்கு சென்று பணம் திருட வாய்ப்பு உள்ளது. எனவே, போன் தொலைந்த உடன் உங்களுடைய யுபிஐ கணக்கை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்.
கூகுள் பே வைத்திருந்தால் 1-800-419-0157 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை கொடுத்து யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.
போன் பே-யில் 0806-8727-374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பேடிஎம் யூசர் என்றால் 0120-04456-456 -என்ற எண்ணை அழைக்க வேண்டும்.
இதன் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.