Google Pay-க்கு Bye; சுந்தர் பிச்சை சொல்லிட்டு செஞ்ச அந்த வேலை!
இந்தியாவில் உள்ள கூகுள் பே ஆப்பின் கதை முடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கூகுள் பே
கூகுள் பே ஆப் போன்று கூகுள் வாலட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அதன் கூகுள் வாலட் சேவையில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட் வழியாக கூகுள் வாலட் ஆப் ஆனது நேரடி பயன்பாட்டு அறிவிப்புகளை (Direct App Notifications) வெளியிட தொடங்கியுள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
ட்ரான்ஸ்சாக்ஷசன்ஸ் (Transactions), அப்டேட்ஸ் (Updates), ஆஃபர்ஸ் (Offers) மற்றும் டிப்ஸ் (Tips) தொடர்பான நோட்டிஃபிக்கேஷன்கள், கூகுள் பிளே சேவைகள் மூலமாக இல்லாமல் கூகுள் வாலட் ஆப் வழியாகவே கிடைக்கும். இதனால், கூகுள் பே பயனர்கள் தானாகவே முன்வந்து கூகுள் வாலட் ஆப்பிற்கு மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.
அமெரிக்காவை போல் இல்லாமல் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் கூகுள் பே ஆப் ஆனது ஒரு ஸ்டான்ட்அலோன் ஆப் ஆக தொடர்ந்து வேலை செய்யும். ஏனென்றால், இவ்விரு நாடுகளிலும் கூகுள் பே ஆப் யூசர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இருப்பினும் கூகுள் பே சேவைகள் ஷட்டவுன் செய்யப்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு எளிமையாக கூகுள் வாலட்டிற்கு இடம்பெயரும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.