இனி google pay செயல்படாதா? உறுதி செய்த நிறுவனம் - வெளியான ஷாக் தகவல்!
கூகுள் பே ஜூன் 4 முதல் அதன் சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
கூகுள் பே
டிஜிட்டல் இந்தியாவாக உருவெடுத்த பிறகு நாடு முழுவதும் உள்ள மக்கள் பணபரிவர்த்தனை செய்வதற்கு கூகுள் பே செயலியை அதிகம் பயன்டுத்தி வருகின்றனர், இங்கு மட்டுமல்லாமல் உலக அளவில் கூகுள் பே முக்கிய செயலியாக பங்காற்றி வருகிறது. மேலும், கடந்த 2022ம் ஆண்டு Google Wallet என அறிமுகப்படுத்தியது.
அதன் பிறகு, pay பயனர்களின் எண்ணிக்கை சரசரவென உயர்ந்தது. இந்த சூழலில் தற்போது கூகுள் பே ஜூன் 4 முதல் அதன் சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனம் உறுதி
ஆனால் தேடிப்பார்த்தபோது கூகுள் பே நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை நிறுத்தப்போவதில்லை என்ற தகவல் தெரிந்த பிறகு தான் நிம்மதியடைந்தார்கள்.மேலும், அனைத்து பயனர்களையும் கூகுள் வாலட்-க்கு மாற்றும் விதமாக கூகுள் பே நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரையிலும் 180 நாடுகளில் உள்ள பயனாளர்கள் கூகுள் பே-விற்கு பதிலாக கூகுள் வாலட்-ஐ பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன் காரணமாக ஜூன் 4ம் தேதி முதல் அமெரிக்க பயனாளர்கள் கூகுள் பே மூலம் பணம் அனுப்பவோ, பணம் பெறவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் மற்றும் தனது சேவைகளை நிறுத்தாது என அதன் நிறுவனம் உறுதி செய்துள்ளது.