இனி இதற்கு கட்டணம் - இந்த இலவச சேவையை நிறுத்திய Google Pay
இலவச மொபைல் ரீசார்ஜ் சேவையை கூகுள் பே நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பே
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் டாப் 5 யுபிஐ ஆப்களில் கூகுள் பேவுவும் ஒன்று. வீட்டில் இருந்தே பணம் அனுப்புவதில் தொடங்கி, மின் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் என பலவற்றை செய்ய உதவுகின்றன.
இந்நிலையில், கட்டணம் வசூலிக்கும் முறையை கூகுள் பே அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த நவம்பர் 10ஆம் தேதி புதிய சேவை விதிமுறைகளை வெளியிட்ட கூகுள் பே, அதில் கட்டணம் பற்றி தெரிவித்த நிலையிலும்,பலர் அதனை அறிந்திருக்கவில்லை.
இனி கட்டணம்
100 ரூபாய் வரை செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை என்றாலும், 100 முதல் 200 ரூபாய் வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாய் கட்டணம் விதிக்கிறது.
201 முதல் 300 ரூபாய் வரை 2 ரூபாயும், 301 ரூபாய்க்கு மேலான ரீசார்ஜ்களுக்கு 3 ரூபாயையும் convenience fee என்ற பெயரில் கட்டணம் விதிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் கட்டணங்களை தவிர்க்க விரும்புவோர் டெலிகாம் ஆபரேட்டர்களின் ஆப்கள் அல்லது இணையதளம் மூலம் நேரடியாக ரீசார்ஜ் செய்வதே இனி சிறந்த வழியாக கருதப்படுகிறது.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

இஸ்ரேல் ஈரான் யுத்தத்தில் இஸ்ரேலின் முக்கியமான பின்னடைவு!! வெளிவரும் அடுத்த யுத்தத்திற்கான கட்டியம் IBC Tamil
