பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Google Sundar Pichai
By Sumathi May 05, 2024 07:56 AM GMT
Report

சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக பணியாற்றி வருபவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மெக்கன்சி கம்பெனியில் ஆலோசகராக கெரியரை தொடங்கிய அவர், 2004ல் கூகுள் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார்.

sundar pichai

கூகுள் டூல்பார், ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்பு வெற்றியில் இவரது பெரும் பங்கு உள்ளது. 2008 இல் கூகுள் குரோம்-ன் இறுதி வெளியீட்டிலும் முக்கிய பங்கு வகித்தார்.

சுந்தர் பிச்சை பதவி நீக்கம்? ஷாக் தகவல் - இதுதான் காரணமா!

சுந்தர் பிச்சை பதவி நீக்கம்? ஷாக் தகவல் - இதுதான் காரணமா!

சொத்து மதிப்பு

அதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபலமானவராக மாறினார். 2016ல் கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் 273,328 பங்குகள் அவருக்கு வழங்கப்பட்டது. 2019ல் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். தொடர் கடும் உழைப்பின் காரணமாக கூகுள் பெரும் வளர்ச்சியடைந்தது.

google ceo

இந்நிலையில், 2022ல் ரூ 1,215 கோடியாக இருந்த சுந்தர் பிச்சையின் சொத்து தற்போது 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 8,342 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.