அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.760 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை சரிவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு ஆகியவற்றால்
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்தும், அதிகரித்தும் வந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ760 குறைந்து ரூ37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் ஒன்றுக்கு ரூ.95 குறைந்து ரூ.4,740க்கு விற்பனையாகிறது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் வெள்ளி ரூ.1.30 குறைந்து ரூ66க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேர்திருவிழாக்களில் அசம்பாவிதம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு