அப்படியே.. சரியும் கோபி மஞ்சூரியன் விற்பனை; அச்சத்தில் மக்கள் - ஏன்?
கோபி மஞ்சூரியன் விற்பனை 80% சரிவடைந்துள்ளது.
கோபி மஞ்சூரியன்
தமிழ்நாடு அரசு செயற்கை நிறமூட்டிய பஞ்சு மிட்டாய்களை தடை செய்தது. தொடர்ந்து, கர்நாடக மாநில அரசும் செயற்கை நிறமூட்டிய கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்தது.
செயற்கை நிறமூட்டிகளில் இருக்கக்கூடிய ரோட்டாமைன் பி மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் மற்றும் பிற பாதிப்புகளை உண்டாக்குகிறது. எனவே, கோபி மஞ்சூரியனை விற்க கூடாது என அறிவிக்கப்பட்டது.
விற்பனை சரிவு
இதனால், பெங்களூருவில் கோபி மஞ்சூரியன் சார்ந்த வணிகம் 80 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறமூட்டிகள் சேர்க்கப்படாத கோபி மஞ்சூரியங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு ரூ.10,000 வியாபாரம் செய்து வந்த நிலையில் தற்போது அது ரூ.5,000க்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
செயற்கை நிறமூட்டி கலந்த கோபி மஞ்சூரியனுக்கு தான் அரசு தடை விதித்துள்ளதே தவிர ஒட்டுமொத்தமாக கோபி மஞ்சூரியனையே சாப்பிட கூடாது என அரசு கூறவில்லை என்கின்றனர்.