இனி கோபி மஞ்சூரியனுக்கு மொத்தமாக தடை; பேராபத்து - என்ன காரணம்?
கோபி மஞ்சூரியனுக்கு கோவாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோபி மஞ்சூரியன்
நாடு முழுக்க மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று கோபி மஞ்சூரியன். காலிஃபிளவரை வைத்துச் செய்யப்படும் இந்த உணவுக்கு, உணவு பிரியர்களிடையே தனி இடம் உள்ளது.
இந்நிலையில், யூனியன் பிரதேசமான கோவா கோபி மஞ்சூரியன் உணவுக்கே மொத்தமாகத் தடை விதித்துள்ளது. இதில் செயற்கை நிறங்கள், அதிக ரசாயனம் கொண்ட சாஸ் பிளேவர்கள் கலக்கப்படுவதும், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதும் இந்த திடீர் தடைக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
தடை
முன்னதாக, 2022ல் ஸ்ரீ தாமோதர் கோவிலில் நடந்த வாஸ்கோ சப்தா கண்காட்சியின் போது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இதற்குத் தடை விதித்தது.
தற்போது, மபூசா மாநகரம் இந்த உணவுக்கு தடைவிதித்துள்ளது. நீண்ட காலமாகவே இந்த உணவில் சுகாதாரம் தொடர்பாகப் பிரச்னைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.