இனி பஞ்சுமிட்டாய் & கோபி மஞ்சூரியனுக்கு தடை - அரசு அறிவிப்பு!

Karnataka
By Sumathi Mar 11, 2024 10:30 AM GMT
Report

பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்கு அரசு தடை விதித்துள்ளது.

பஞ்சு மிட்டாய் & மஞ்சூரியன்

நாடு முழுக்க மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று கோபி மஞ்சூரியன். காலிஃபிளவரை வைத்துச் செய்யப்படும் இந்த உணவுக்கு, உணவு பிரியர்களிடையே தனி இடம் உள்ளது.

gobi manchurian - cotton candy

மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் உணவாகப் பஞ்சு மிட்டாய் இருக்கிறது. இந்நிலையில், உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவது உறுதியானதால் கர்நாடக மாநிலத்தில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை - பொதுமக்களை எச்சரித்த தமிழக அரசு!

பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை - பொதுமக்களை எச்சரித்த தமிழக அரசு!

 அரசு தடை 

மேலும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் இத்தடையை மீறி விற்பனைசெய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனி பஞ்சுமிட்டாய் & கோபி மஞ்சூரியனுக்கு தடை - அரசு அறிவிப்பு! | Govt Bans Sale Gobi Manchurian And Cotton Candy

முன்னதாக கடந்த மாதம் பஞ்சுமிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. அதேபோல், வடக்கு கோவாவில் சாலையோரக் கடைகளில் கோபி மஞ்சூரியன் விற்கத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.