பசியால் வாடும் 700 மில்லியன் மக்கள்; பட்டினி குறியீடு - இந்தியா கவலைக்கிடம்!
உலக பட்டினி குறையீடு பட்டியல் வெளியாகியுள்ளது.
பட்டினி குறையீடு
உலக நாடுகளில் பசியின் அளவை கண்காணிப்பதற்கான கருவியாக, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.
இதன் அடிப்படையில், 19ஆவது பட்டியலை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதநேய அமைப்பான கன்சர்ன் ஓல்டுவைட், ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர்லைப் ஆகியவை வெளியிட்டுள்ளன. அதன்படி, நாட்டு மக்களில் 13.7 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு,
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவிகிதம் பேர் வளர்ச்சி குன்றியவர்கள், அதில் 18.7 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்கள், 2.9 சதவிகித குழந்தைகள் 5 வயது நிறைவடைவதற்கு முன்பே இறப்பது என்பது தெரியவந்துள்ளது.
இந்தியா கவலைக்கிடம்
இந்த குறியீட்டில் 127 நாடுகளுள் இந்தியா 27.3 மதிப்பெண்களுடன் 'தீவிரமான' பசி பிரச்னைகள் கொண்ட 42 நாடுகளுள் ஒன்றாக ‘கவலைக்குரிய’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியா அண்டை நாடுகளான பங்களாதேசம், மியான்மர், இலங்கை, நேபாளம், மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கி உள்ளது, எனினும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சற்று மேலே உள்ளது. சர்வதேச அளவில், தினமும் சுமார் 733 மில்லியன் மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர்.
அதில், சுமார் 2.8 பில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
2030க்குள் பூஜ்ஜிய பட்டினி நிலையை அடைவதற்கான இலக்கு மிகவும் அரிதாக இருப்பதாகவே அறிக்கை மூலம் தெரியவருகிறது