ஒரு பக்கம் பசி, பட்டினி; மறுபக்கம் குப்பையில் 1 பில்லியன் டன் உணவு - கொடுமை!
உலகில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டன் உணவை வீணடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விரயம்
உலக அளவில் உணவு உற்பத்தி செய்யும் அளவையும் உலக மக்கள் உட்கொள்ளும் அளவையும் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) குழு உணவுக் கழிவு குறியீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், உலகில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உண்ணாமல் வீணடிக்கப்படுகிறது. இந்த உலகளாவிய உணவு விரயம் என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பசி, பட்டினி
மதிப்பீடுகளின்படி, உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 8-10 சதவீதம் உட்கொள்ளப்படாத உணவுகளால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் உணவுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வீடுகளில் உணவை பெரிதும் வீணடிப்பதால் தான்.
இதனால், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2013 இல் Think Eat Save உலகளாவிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. பசியும் பட்டினியும் வாட்டி மக்கள் இறக்கும் அதே நேரத்தில் தான் உணவு விரயங்களும் நிகழ்கிறது.