எல்லைமீறிய ட்ரோல்கள்; முக்கிய பிரச்சனையை கவனிங்க - மேக்ஸ்வெல் மனைவி காட்டம்
ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியா வெற்றி
இதன் எதிரொலியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு வெறுக்கத்தக்க மெசேஜ்களை அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இதை சொல்ல வேண்டியதற்கான தேவை எழுந்திருப்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் பிறந்து, வளர்ந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதேசமயம், உங்களின் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் உங்கள் கணவர் விளையாடும் அணியையும் ஆதரிக்க வேண்டும்.

‘’ அவளை ரசித்து கிடந்த விழிகள் வேறாரையும் பார்க்காதே ‘’ : மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்த மேக்ஸ்வெல் ஜோடி வைரலாகும் புகைப்படம்
மேக்ஸ்வெல் மனைவி பதிவு
உங்களின் சீற்றத்தை உலகில் நிகழும் முக்கியமான பிரச்சினைகளை நோக்கி திருப்புங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மினி தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆஸ்திரேலியாவில் படித்து, கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துவ முறைப்படியும், தமிழகத்தில் இந்து முறைப்படியும் இவர்களுக்கு திருமணம் நடந்தது.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.