நடனம் ஆடி காதலி வினி ராமனை தமிழ் முறைப்படி மணந்தார் க்ளென் மேக்ஸ்வெல் - வைரலாகும் வீடியோ
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரௌண்டரான க்ளென் மேக்ஸ்வெல் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமனை கடந்த 18-ந் தேதி கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார்.
க்ளென் மேக்ஸ்வெல், வினி ராமனை ஒரு வாரம் கொண்ட திருமண நிகழ்வுகளை உள்ளடக்கிய பாரம்பரிய ஐயங்கார் சடங்குகள் சமீபத்தில் நடைபெற்றது.
இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களது கிறிஸ்தவ முறைப்படியான திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
அதேபோல் தமிழ் முறைப்படி நலங்கு வைப்பன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை வினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் க்ளென் ஆரஞ்சு நிற குர்தா மற்றும் முழு நீல பேன்ட் அணிந்தப்படி, பாரம்பரிய பட்டுபுடவை உடுத்தியிருக்கும் மனைவி வினியின் நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.
இவர்களது கல்யாண பத்திரிகை மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் தற்போது இவர்களது தமிழ் முறைப்படியான திருமணம் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
Glen Maxwell... Wedding in Chennai. He married an Iyengar girl from Chennai! Tamil tradition ??@sreeramjvc @sumanthraman pic.twitter.com/kKEwVCeZIq
— Kathir?? (@kathirdada) March 28, 2022
நடனம் ஆடியும் சிரித்து மகிழ்ந்தும் க்ளென் மேக்ஸ்வெல்லும் வினியும் மாலை மாற்றிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.