குழந்தை பெற்றெடுத்தால் ரூ.45,000 மானியம் - 1 குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு..
குழந்தை பெற்றெடுத்தால் ரூ.45,000 மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை சரிவு
மக்கள் தொகை எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த சீனா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சரிந்து வருகிறது.
குழந்தை பராமரிப்பு, கல்விக்கான செலவு அதிகரித்தது, பொருளாதார மந்தநிலை, போன்ற காரணங்களால், சீனர்கள் திருமணம் செய்து கொள்வது குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
மானியம் அறிவிப்பு
இதனால் சீன அரசு மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு, தேசிய குழந்தை பராமரிப்பு மானியத்தை முதல்முறையாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு குடும்பத்தில் உள்ள 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு, 45,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 3 வயது வரையில், ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகளுக்கு இந்த மானியம் கிடைக்கும்.
இது, இந்தாண்டு ஜன., 1ம் தேதியில் இருந்து அமல்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.