40 நாடுகளுக்கு இலங்கை கொடுத்த ஆஃபர் - நோட் பண்ணுங்க!

Sri Lanka Tourism Sri Lanka Sri Lanka visa
By Sumathi Jul 30, 2025 11:47 AM GMT
Report

இலங்கை விசா இல்லாத பயணத் திட்டத்தை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

விசா வேண்டாம்..

நமது நாட்டின் அண்டை நாடான இலங்கை தங்கக் கடற்கரைகள், பசுமையான நிலப்பரப்புகள், காட்டு சஃபாரிகள் மற்றும் பழங்கால கோயில்கள் எனப் பலவற்றைக் கொண்டுள்ளது.

sri lanka

இந்த நாடு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் விசா இல்லாத பயணத் திட்டத்தை 7 நாடுகளுக்கு வழங்கியிருந்தது. தற்போது இந்த திட்டத்தை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹெராத் கூறுகையில்,

தாய்லாந்து போகவேண்டாம்; இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங் - என்ன காரணம்?

தாய்லாந்து போகவேண்டாம்; இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங் - என்ன காரணம்?

இலங்கை அறிவிப்பு

“விசா இல்லாத பயணக் கொள்கை நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவும். இதன்மூலம், நாங்கள் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் சுற்றுலாவில் கொள்கை மாற்றங்கள் மூலம், வருகையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

srilanka visa

அதன்படி, இந்த விசா இல்லாத பயணத் திட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், ஈரான், நார்வே, தென் கொரியா, ஸ்வீடன், ஆஸ்திரியா, பின்லாந்து, டென்மார்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து,

பெல்ஜியம், ஸ்பெயின், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, நேபாளம், பிரான்ஸ், செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், பெலாரஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து, குவைத் மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும்.