பட்டினியால் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள் - உலகை உலுக்கும் கதறல்!
பட்டினி காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
வாட்டும் பட்டினி
இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் காரணமாக காசா கடுமையான இன்னல்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக பட்டினி காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
காசாவுக்குள் அனைத்து பொருட்களும் இஸ்ரேல் வழியாகவே செல்கின்றன. ஆனால் இஸ்ரேல் அனுமதி மறுப்பதால் உலக நாடுகள் அனுப்பிய உதவிகள் உள்ளே சென்று சேராமல் இருக்கிறது. உணவுப் பொருட்களை விமானம் மூலம் வீச இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உணவுப் பொருட்களை வீச இன்னும் இஸ்ரேல் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுகிறது.
கதறும் காசா
இதனால் காசாவுக்குள் உதவிப் பொருட்கள் செல்வதற்கான தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.
இதையடுத்து காசா சிட்டி, டெய்ர் அல்- பலாஹ் மற்றும் முவாசி ஆகிய மக்கள் அடர்த்தி நிறைந்த மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
மேலும், காசாவில் மாவு, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வான்வழியாக வீசியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் நடத்தி வரும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின்படி, காசாவில் இதுவரை 59,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.